Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » மீள் குடியேறிய மாணவர்களுக்கு யாழ்.ஏய்ட் நிறுவனம் நிதியுதவி

யாழ்.ஏய்ட் நிறுவனம் நலிவுற்ற மாணவர்களின் கல்விமேம்பாட்டை நோக்காக கொண்டது. அவ் நிறுவனம் கடந்த 14.10.2011 அன்று கரைநகர் பிரதேசத்தில் 23 வருடங்களின் பின்னர் மீள்குடியேற்றம் இடம்பெற்று மீளத்திறக்கப்பட்ட வேரவில் ஸ்ரீ கணேசா வித்தியாலயம்,

தோப்புக்காடு திருஞானசம்பந்தர் வித்தியாலயம் மற்றும், யாழ்ரன் கல்லூரி ஆகியவற்றைச்சேர்ந்த மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிப்பொருட்களை வழங்கியது. அவ் பாடசாலை அதிபர்கள் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் சமூகசேவையாளரும் பிரபல வர்த்தகருமான ஈ.ஸ்.பி நாகரட்ணம் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார்.

சிறப்புவிருந்தினர்களாக தீவகக் கல்விவலய கல்வி அபிவிருத்திப் பிரிவின் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.ஸ்ரனிஸ்லஸ், மற்றும் வெங்கடேஸ்வரா வர்த்தக நிறுவன உரிமையாளரும் பரியோவான் கல்லூரி பழைய மாணவமாகிய திரு.செந்தூரன் ஆகியோர் மாணவர்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கிவைத்தனர்.

1 Comment

  1. இவர்கள் செய்யும் வேலையானது அடுத்த அரசியலுக்கான முதல் படி
    உண்மையில் அவர்கள் நலிவுற்ற மாணவர்களின் கல்விமேம்பாட்டை உயர்த்துவதாயின் நலிவுற்ற மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களின் உயர்கல்வி வரை அவர்களை கற்க வைக்க முயற்சி எடுக்க வேண்டும். ஒரு நாள் கற்றலுக்கான உதவிப்பொருட்களை வழங்குவது இவர்களின் பிரச்சாரத்திற் மட்டுமே உதவும். ஒரு போதும் மாணவர்களின் கல்விமேம்பாட்டை உயர்தாது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com