Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் 17 வருடங்களின் பின் மீள் குடியேற்றம்

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற் குட்பட்ட 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் 17வருடங்களின் பின் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட துண்டி, மகேந்திரபுரம், புனித புரம், எழிலூர், பிரதான வீதி கொழும்புத் துறை ஆகிய பிரதேசங்களில் மொத்தமாக 980பேர் மீள்குடி யேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் கிழக்கு அரியாலை, பூம்புகார் போன்ற பகுதி களில் மொத்தமாக 120குடும்பங்களுக்கு மேலாக நேற்று மீள் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.எஸ்.டக்ளஸ் தேவா னந்தா, யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வெஸ்திரி அலென்ரின், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா,பிரதி மேயர் இளங்கோ, யாழ்.பிரதேச செயலர் சுகுணரதி தெய்வேந் திரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com