Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » 30 வருட காலத்தின் பின்னர் தொண்டைமானாறு வீதி திறப்பு

30 வருட காலமாக மூடப்பட்டிருந்த தொண்டைமானாறு – அச்சுவேலி வீதி நேற்று திறந்துவைக்கப்பட்டது தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலை யில் இவ் வீதி திறக்கப்படவுள்ளது. வல்லைப் பிரதேச வீதிகள் துரிதமாகப் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

இவ் ஆலயத்திற்குத் தென்பகுதி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் பெரும் திரளாக வருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதும் அவர்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாமல் இருப்பதற்காகவுமே இவ் வீதி திறந்து வைக்கப்பட்டது

கடந்த மூன்றாம் திகதி இவ் ஆலயத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலய பரிபாலன சபை மற்றும் பொது அமைப்புக்களும் இவ் வீதியைத் திறந்து பக்த அடியார்களுக்கு உதவ வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அமைச்சர் பலாலி இராணுவப் படைத்தரப்புடன் தொடர்பு கொண்டு இவ்ஏற்பாடுகளைச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திறந்து வைக்கப்படும் வீதி தொண்டைமானாறு காற்றாடிச் சந்தியிலிருந்து தம்பாலைச் சந்தி, கதிரிப்பாய்ச் சந்தி, பத்தைமேனி ஊடாக அச்சுவேலி நகரத்தை அடையும் இவ் வீதி, கடந்த 30 வரு டங்களாக மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

நன்றி: வலம்புரி

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com