Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, நிகழ்வுகள், யாழ்.செய்திகள் » 30 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தின் நாடக மொன்றுக்கு தேசிய விருது(படங்கள் இணைப்பு)

25 வது சர்வதேச இளைஞர் வருடத்தை முன்னிட்டு தேசிய இளைஞர்கள் சேவை மன்றமும் இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடாத்திய 32 வது தேசிய இளைஞர் விருது வழங்கும் நிகழ்வில் மல்லாகத்தைச் சேந்த எஸ்ரி.குமரன்   எஸ்ரி.அருள்குமரன் ஆகியோரின் எழுத்துருவாக்கம் , நெறியாள்கை மற்றும் தயாரிப்பில் உருவாகிய ‘கண்டல்’ எனும் அபத்த நாடகம் 5 தேசிய விருதுகளைப்பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் 30 வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தின் நாடக மொன்றுக்கு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன.
அதிக வசனங்களின்றி செயலாற்றலுடன் கூடிய இந்நாடகத்திற்கு தயாரிப்பு , நெறியாள்கை , வேடவுடை , ஒப்பனை,  சிறந்த ஆற்றுகை என்பவற்றுக்காக 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.  அத்தோடு அபத்த நாடகம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக தேசிய விருதை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.   இந்த  இளைஞர் தேசிய நாடக விழாவில் நான்கு நாடகங்கள் பங்கு பற்றியிருந்தன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ‘கண்டல்’ நாடகமும் வவுனியா மாவட்டத்தில் இருந்து ‘எங்களுக்காக’ நாடகமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ‘பயனப்பை’ நாடகமும் அனுராதபுரத்தில் இருந்து ‘கலைந்த கனவுகள்’ நாடகமும் பங்குபற்றியிருந்தன.
இந்தப் போட்டியிலே மேற்படி நாடகம் முதலிடத்தை பிடித்தது.  இந் நாடகத்தில் எட்டு கலைஞர்கள் பங்கு பற்றியதோடு நாடகத்துக்கான இசையமைப்பினை  கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்  எஸ்.சதீஸ் வழங்கியிருந்தார்.
கடந்த மாதம் 29 ம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு மகரகம இளைஞர் நிலைய  பிரதான அரங்கில் இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெருமா தலைமையில் இவ்விருது வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com