Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » 30 வருடங்களாகத் திருத்தப்படாத மானிப்பாய் செல்லமுத்து வீதி

மானிப்பாய் செல்லமுத்து வீதியிலிருந்து மார்க்கண்டு வீதியூடாக லோட்டஸ் வீதிக்குச் செல்லும் பிரதான வீதி கடந்த 30 வருடங்களுக்கு மேலாகத் திருத்தம் செய்யப்படவில்லை.

இந்த வீதி 1975 ஆம் ஆண்டு தார் ஊற்றித்திருத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இதுவரை இந்த வீதி செப்பனிடப்படாதமையால் பெரிய கிடங்குகள் ஏற்பட்டு குன்றும் குழியுமாக உள்ளது.

மழை பெய்தவுடன் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்வதற்கும் பாடசாலைப் பிள்ளைகள் செல்வதற்கும் தடையாகவுள்ளது.

இந்த இடத்தில் செல்லமுத்து விளையாட்டு அரங்கும் அமைந்துள்ளதால் சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பகுதி உள்ளூராட்சி உறுப்பினர்கள் இதனைப் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com