Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வலுவிழந்தோர் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்த சமுதாயத்தின் ஒத்துழைப்பு அவசியம்

வலுவிழந்தோர் உற்பத்தி செய்யும் உற்பத்திப் பொருள் களைச் சந்தைப்படுத்துவதற்கு சமுதாயம் சார்ந்தவர்களின் ஒத் துழைப்புக் கட்டாயம் தேவை.இவற்றை ஊக்குவிக்கும் போது மாற்று வலுவுடையோர் களின் திறன்கள் மேலும் விருத்தி யடையும். மாற்றுவலுவுடை யோர்களுக்கு புனர்வாழ்வு அளிக் கப்படும் நோக்கில் உருவாக் கப்பட்ட வலுவிழந்தோர் சங்கத் தின் பணிகளுடன் பொதுமக்களும் ஒன்றிணைந்து சேவை வழங்க முன்வரவேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார் வைத்திய கலாநிதி ந.சிவராஜா.வலுவிழந்தோர் புனர்வாழ் வுச் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக் கிழமை ஆடியபாதம் வீதி, கொக்கு வில் கிழக்கில் அமைந்துள்ள சங்கக் கட்டத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தலைமை யுரை நிகழ்த்தும் போதே சங்கத் தலைவர் வைத்திய கலாநிதி ந.சிவராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந் தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கலந்து கொண்டு மாற்றுவலு வுடையோர்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி, விற்பனை நிலை யம் என்பவற்றைத் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து மாற்று வலுவுடையோர்கள் பங்குபற் றிய விநோத உடைப் போட்டி, சிறப்பு நாடகம், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இந்த நிகழ்வின் சிறப்பு நிகழ் வாக சங்கத்தின் 21 ஆவது நிறைவு தினத்தை முன்னிட்டு மலர் வெளியீடும், பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றன.

இதேவேளை இரு தினங்களுக்கு கண்காட்சி யாழ். வலுவிழந்தோர் புனர் வாழ்வுச் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி தொடர்ந்து 2 நாள்கள் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வலுவிழந்தோர்கள் ஒன்றி ணைந்து உள்ளூர் உற்பத்திப் பொருள்களைக் கொண்டு கண் காட்சிக்குத் தேவையான உற்பத் திப் பொருள்களை தயார் செய்து கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஆடைகள், கடித உறைகள், அழகுசாதனப் பொருள் கள், வாழ்த்து மடல்கள் போன்றன இதில் வைக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமையும், நாளை திங்கட்கிழமையும் இந்தக் கண்காட்சி இடம்பெறும்.அத்துடன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உற்பத்திப் பொருள்களை பொது மக்கள் கொள்வனவு செய்யமுடி யும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com