Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வலி.வடக்கு மக்கள் சொந்த மண்ணில் கால்பதிக்கும் வாய்ப்பு மிக விரைவில்.

இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து, உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்ட வலிகாமம் வடக்கு  மக்கள் விரைவில் தங்களின் சொந்த மண் ணில்  சொந்த இடங்களில்  மீளக்குடிய மரும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இவ்வாறு தெரிவித்தார் யாழ்.அரச அதி பர் இமெல்டா சுகுமார்.
உலக அஞ்சல் தினம் நேற்று யாழ். வீர சிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட போது அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்.மாவட்டத்திலுள்ள உயர் பாது காப்பு வலயங்களை நீக்குவதற்காக பலாலி                 தலைமையக படைகளின் கட்டளைத் தள பதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க மேற்கொண்டு வருகின்றார்.
உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் கண்ணிவெடி உள்ள பிரதேசங்களை மட் டும் இனங்கண்டு அப்பிரதேசங்கள் அடை யாளப்படுத்தப்பட்ட பின்னர் ஏனைய பிர தேசங்கள் உடனடியாகவே விடுவிக்கப் படும். அந்தப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவர்.
இதன் ஒரு பகுதியாகவே வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேற்றத்துக் காக அனுமதிக்கப்பட்டன. எதிர்வரும் 9 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக வடம ராட்சி கிழக்கில் ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடியமர உள் ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங் களிலும் மீள்குடியமர்வு இடம்பெறும்
இனிவரும் காலங்களின் யாழ்ப்பா ணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க படைத்தரப்பில் நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  என்றார்.  இதேவேளை வடமாகாண அஞ் சல் திணைக்களம் பலத்த சிரமங்கள், வசதி யீனங்களுக்கும் மத்தியில் சிறந்த சேவை யாற்றி வருகின்றது. இத்திணைக்களம் யுத்தகாலங்களிலும் சிறப்பாகச் செயற் பட்டு வந்தமையை பாராட்டுகின்றேன் என்றும் குறிப்பிட்டார் அரச அதிபர்.

நன்றி: உதயன்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com