Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » வலி.வடக்கில் 20 வருடங்களின் பின்னர் 970 குடும்பங்கள் மீள்குடியமர்வு(படங்கள் இணைப்பு)

வலி.வடக்கில் 20 வருடங்களின் பின்னர் 970 குடும்பங்களைச் சேர்ந்த 3, 448 பேர் தமது சொந்த இடங்களுக்கு நேற்றுத் திரும்பினர்.
இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே அவர்கள் மீளக்குடியமர்ந் துள்ள னர்.
மீள்குடியமர்வு நிகழ்வு காலை 8 மணிக்கு  இடம்பெறும் என அறிவிக்கப் பட்டிருந்ததை அடுத்து அப்குதியில் மீளக்குடியமரவேண்டிய குடும்பங்கள்  நேற்றுக் காலையே கீரிமலையை வந்த டைந்தனர். எனினும் மீள்குடியேற்ற நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கே இடம் பெற்றது.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில்  பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த மீள் குடியேற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன்  ஆகி யோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மீள்குடியமர்த்தப்பட்ட  மக் களுக்கு 5 ஆயிரம் ரூபா பணமும், சிமெந் தும், கூரைத்தகடுகளும் வழங்கப்பட்டன. அத்துடன் விடுவிக்கப்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படும் மக்கள் கீரிமலை நகுலேஸ்வரா வீதி, சேந்தாங்குளம் வீதி, ஆலடி வீதி ஆகிய வற்றைப் போக்குவரத்துக்குப் பயன் படுத்தலாம். என்று அங்கிருந்த மக்க ளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பி னர்களான மு.சந்திரகுமார், சில்லேஸ்திரி அலன்ரின் உதயன், யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ் வரி பற்குணராசா மற்றும் ஈ.பி.டிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் க. கமல், வலி.வடக்குப் பிரதேச செயலர் எஸ். முரளிதரன், 515 ஆவது படைப்பிரிவின் இராணுவத் தளபதி எல்.ரெந்தேனியா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்றுக் காலை 8 மணிய ளவில் நிகழ்வு நடைபெறவிருந்த விடத் துக்கு பொது மக்கள் சேந்தாங்குளம் பகுதி ஊடாக பஸ்களில் ஏற்றிவரப்பட்டிருந் தனர்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com