Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வலி.வடக்கில் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்

வலி. வடக்கிலிருந்து இடம்பெ யர்ந்து 20 வருடங்களின் பின்னர் மீளக் குடியேறியுள்ள மக்கள் கண் ணிவெடிகள் குறித்து அவதான த்துடன் செயற்படவேண்டும் என தெல்லிப்பழைப் பிரதேச செயலர் எம்.முரளிதரன் ஆலோசனை வழங்கினார்.

வலிகாமம் வடக்கில் மீள் குடிய மர்ந்த மக்களுக்கான மிதிவெடி அபாயம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பன்னாலை சேர். கன கசபை அ.த.க. பாடசாலையில் நேற்று நடைபெற்றது. இதில் கல ந்துகொண்டு உரையாற்றும்போ தே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீள் குடியமர்ந்த மக்கள் இலகுவான முறையில் போக்குவரத்து மேற்கொள்வதற்கென வீதிகள் நிச் சயம் புனரமைத்துத் தரப்படும். குறு கிய காலத்தில் இப்பிரதேசத்திலுள்ள அனைத்து வீதிகளும் புனரமைப் புச் செய்வது இயலாத ஒன்று. எனவே முக்கியமான சில வீதிகள் புனர மைப்புப் பணிகள் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

யுத்தத்தின் போது இந்தப்பகுதி யில் மிதிவெடிகள் அதிகமாக புதை த்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றி னை அகற்றும்வரை குறிப்பிட்ட எல்லைகளை மட்டுமே மக்கள் தமது போக்குவரத்துக்கு உபயோகி க்கவேண்டும்.20 வருடமாக இடம்பெயர்ந்து இருந்து மீண்டும் மீள் குடியேறி யுள்ள நீங்கள் உயிரையோ, உடல் உறுப்புக்களையோ இழந்துவிடக் கூடாது. இதற்கெனத்தான் உங்க ளிற்கு இத்தகைய மிதிவெடி அபா யக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. மக்களின் இலகுவான போக்க வரத்துக்கு என மண் அனைகளில் சிறுபகுதி மட்டும் தற்போது அகற்றப்படும். ஏனையவை காலப்போக் கில் முற்றாக நீக்கி போக்குவரத்து துரிதப்படுத்தப்படும்.

மக்களிடம் நாம் வேண்டுவது நீண்ட காலத்தின் பின் உங்கள் சொந்த இடங்களில் குடியேறும் நீங்கள் உங்களது காணிகளில் எல்லைகளை சரிவர அளந்து பெற் றுக்கொள்ளுங்கள். வீதிகளை புனர மைப்புச் செய்யும்போது அந்தந்தக் காணி உரிமையாளர்கள் தமது காணி எல்லைகளை எல்லைப்படு த்தி பிரச்சினைகள் ஏற்படாத வண் ணம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்.

பெற்றோர்கள் தமது பிள்ளை களை பாதுகாத்துக்கொள்ள வேண் டும். மிதிவெடிகள் முற்றாக நீக்கப் படாத பகுதிகளிலேயே நீங்கள் மீள் குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளீர் கள் எனவே உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவதானியுங்கள். தேவையற்ற பொருட்களை கையா ளுவதிலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com