Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வலி.தெற்கு பிரதேச சபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தம்

வலி.தெற்குப் பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.கடந்த சனிக்கிழமை உழவு இயந்திர சாரதியினால் வேலை மேற்பார்வை யாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதனைச் சபையின் செயலாளரின் கவனத்துக்குப் பாதிக்கப்பட்ட ஊழியர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட உழவு இயந்திர சாரதி ஒழுக் காற்று விசாரணைக்காக இடைநிறுத்தப்பட்டார்.இந்த நிலையில் உழவு இயந் திர சாரதிக்குப் பதிலாக ஒருவ ரைத் தற்காலிகமாக நியமித்து சுகாதார வாரத்தையொட்டி குப்பைகளை அகற்றும் பணியில் சபை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சம்பந்தமாக எந்தவொரு முன்னறிவித்தலும் கொடுக்காது கையொப்பம் இட்டு விட்டு வேலைக்குச் செல்லாத நிலையில் நின்றதுடன் வெலை செய்தவர்களைத் தடுத்ததால் சுன்னாகம் பொலிஸாருக்கு பிரதேச சபையால் அறிவிக்கப்பட்டது.சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இந்த விடயம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com