Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வலி.கிழக்கு பிரதேச சபையால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் விசேட சபை அமர்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது. இதில் 2012 இல் சபையினுடைய நிதி குறித்தொதுக்கப்பட்ட மாகாண விசேட நன் கொடை, பிரமாண அடிப்படையிலான மூல தன நன்கொடை, என்றிப் திட்டம், நெல்சிப் திட்டம் என்பவற்றினூடாக எதிர்காலத்தில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்ட அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலான முன்மொழிவுகள் தவிசாளரினாலும் உறுப்பினர்களினாலும் முன்வைக்கப்பட்டு சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம்,சபையின் உப அலுவலகங்கள், நூல் நிலையங்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகளைத் திருத்தஞ்செய்தல். வலி.கிழக்குப் பிரதேச சபையின் எல் லைக்குள் பொதுவான இடத்தில் கொல்களம் அமைத்தல். புதிதாக அலுவலகங்களுக்குத் தேவையான தளபாடங்களினை கொள்வனவு செய்தல். டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தினை பொதுமக்கள், நலன் விரும்பிகளின் உதவியுடன் முழு அளவில் மேற்கொள்ளல். நீர்வேலி தரவை நிலத்தில் கழிவுப் பொருட்களை தரம் பிரித்து மீள் பயன்பாட்டிற்கான பொருட்களை வேறு பிரதேச சபைகளுக்கு விற்பதோடு பயன்பாடற்ற பொருட்களை சுற்றுச் சூழல் மாசடையாவண்ணம் அழித்தல்.

பொதுச் சந்தைகளைத் திருத்தஞ் செய்தலும் சந்தைகளுக்கான அடிப்படை வசதி களை ஏற்படுத்திக் கொடுத்தல். புத்தூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைத்தல். பால் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து பாலினைக் கொள்வனவு செய்து பால் பைக் கற்றுக்களை வலி.கிழக்குப் பிரதேசத்தில் விநியோகித்து அதன் மூலம் வருமானத்தினை ஈட்டுதல். பொது மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தக்கூடிய வகையில் மரநடுகைத் திட்டத்தினை முன்னெடுத்தல். அத்துடன் குறித்தொதுக்கப்பட்ட மாகாண விசேட நன்கொடை நிதி மூலம் உள்ளூர் வீதிகளினை அபிவிருத்தி செய்தல், சமூக அபிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல திட்டங்கள் சபையில் முன்னெடுக்கப்பட்டு சபையினரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு செயல்வடிவம் பெற விருக்கின்றன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com