Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வயல் நிலங்களை சூறையாடும் கட்டாக்காலி மாடுகள்!

அரியாலை கிழக்குப் பகுதி வயல் நிலங்களை சூறையாடிவரும் கட்டாக்காலி மாடுகளின் சுதந்திரப் போக்குக் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

அரியாலை கிழக்குப் பகுதி விவசாயி கள் 15 வருடங்களாக துன்பங்களைச் சுமந்து வந்தனர். சொந்த நிலங்களிலே உரிமையோடு விவசாயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டு வந்தது. எனினும் இவ்வருடம் அவர்கள் அங்கு சென்று விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த னர். பதினைந்து வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் இடப்பெயர்வின் போது கைவிடப்பட்ட மாடுகளே தற் போது கட்டாக்காலிகளாக பயிர் நிலங்களைச் சேதப்படுத்தி வருகின்றது.

இக்கட்டாக்காலி மாடுகளை அடக்குவதில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தமது விவசாய நடவடிக் கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவி வழங்குமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com