Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வடமராட்சியில் காணாமல் போன யுவதி நேற்றுச் சடலமாக மீட்பு

புலோலி தெற்கில் கடந்த 29ஆம் திகதி காணாமல்போன யுவதி நேற்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதேயிடத்தைச் சேர்ந்த அரிய நாயகம் துளசி (வயது 19) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.சம்பவம் தொடர்பாக தெரியவருவ தாவது,கடந்த மாதம் 29ஆம் திகதி பிரஸ்தாப யுவதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் நேற்றுக் காலை புலோலி அ.மி.த.க. பாடசாலைக்கு அண்மையிலுள்ள பாழடைந்த வீட்டிற்கு பின்னால் இருந்த கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.அக் கிணறு அமைந்துள்ள வீட்டைப் பராமரிப்பவர் நேற்று காலை 7.30 மணிக்கு அங்கு சென்றபோது கிணற்றில் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் சடலம் மிதப்பதைக் கண்டுள்ளார்.

இது குறித்து அயலவர்களின் உதவியுடன் நெல் லியடி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பொலி ஸாரின் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டது.பிரஸ்தாப யுவதி அணிந்திருந்த நகைகள் சடலத்தி லேயே காணப் பட்டதாகவும் அவரின் செருப்பு மற்றும் தொப்பி என்பன வெவ்வேறு இடங்களில் காணப்பட்ட தாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் விசாரணைகளை மேற் கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

யுவதியின் வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றர் தூரத்தி லிருந்த கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. யுவதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட் டுள்ளனர். இச் சம்பவத்தையடுத்து வடமராட்சியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com