Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வடக்கில் 22,608 மாணவர்கள் சாதாரணதர பரீட்சைக்குத் தயார்

இன்று ஆரம்பமாகும் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு வட மாகாணத்திலிருந்து 22 ஆயி ரத்து 608 மாணவர்கள் தோற்றவுள்ளனர் என வடமாகாண கல்வி யமைச்சுத் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2 ஆயிரத்து 598 இடம்பெயர்ந்த மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்ற மிக ஆவலாக உள்ளனர் எனவும் வடமாகாண கல்வியமைச்சுத் தெரிவித்துள்ளது. யாழ். குடநாட்
டில் இருந்து 24 ஆயிரத்து 567 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் 16 ஆயிரத்து 344 பேர் பாட சாலைப் பரீட்சார்த்திகள் 8 ஆயிரத்து 223 பேர் தனியார் பரீட்சார்த்திகளாவர்.
வலிகாமம் கல்வி வலயத்தி லிருந்து 3 ஆயிரத்து 647 பேரும், 2 ஆயிரத்து 241 தனியார் பரீட் சார்த்திகளும், வடமராட்சிக் கல்வி வலயத்திலிருந்து 2 ஆயிரத்து 728 பேரும், ஆயிரத்து 336 தனி யார் பரீட்சார்த்திகளும், கோப் பாய் பிரதேசத்திலிருந்து ஆயிரத்து 250 பேரும், 741 தனியார் பரீட் சார்த்திகளும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலிருந்து 6 ஆயி ரத்து 188 பேரும், 2 ஆயிரத்து 970 தனியார் பரீட் சார்த்திகளும், தீவகக் கல்வி வலயத்திலிருந்து 970 பேரும், 305 தனியார் பரீட் சார்த்திகளும், தென்மராட்சி கல்வி வலயத்திலிருந்து ஆயிரத்து 561 பேரும், 680 தனியார் பரீட் சாத்திகளும் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
இவர்களுக்காக 70 பரீட்சை நிலையங்கள் செயற்பட உள்ளன.
இதேவேளை
நாடளாவிய ரீதியில் 5 லட் சத்து 4 ஆயிரத்து 416 மாணவர் கள் தோற்றுகின்றனர். இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 603 பேர். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 813 பேர். மாணவர்களுக்கு வசதியான 3,804 பரீட்சை நிலையங்கள் செயற்படுகின்றன.
ஜி.சீ.ஈ. சாதாரண பரீட்சைக் கான பிரிவு இலங்கை முழுவதும் 33 பரீட்சை பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டம் இரண்டு பரீட்சைப் பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐ, யாழ்ப்பாணம் ஐஐ என்ற வகை யில் பரீட்சைகான ஏற்பாடுகளை இலங்கை பரீட்சைத் திணைக் களம் செய்துள்ளது. யாழ்.பிராந்தி யம் ஐ இல் 66 பரீட்சை நிலையங் களும் 13 இணைப்பு நிலைய மும் யாழ்.பிராந்தியம் ஐஐ இல் 85 பரீட்சை நிலையங்களும் 13 இணைப்பு நிலையங்களும் செயற்படுகின்றன. பிராந்திய நிலையம் ஒவ்வொன்றிற்கும் தலா ஒவ்வொரு பிராந்திய ஒருங் கிணைப்பு நிலையம் நிறுவப் பட்டுள்ளன.
பரீட்சைகள் திட்டமிட்ட முறை யில் நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட் டிருப்பதாக இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாய கம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com