Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » வடக்கில் 110,000 பேர் வாக்களிக்க முடியாத நிலை- பப்ரல்

ballot-box1‘வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்’ என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவ்வமைப்பின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் சிறிதரன் சபாநாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கடந்த 2011ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் பிரகாரம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் யாழ் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் பேர் அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுகிறது’ என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலகங்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து நடமாடும் சேவை மூலம் அடையாள அட்டையில்லாவர்களுக்கு அடையாள அட்டையினை வழங்க பப்ரல் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு இந்த அடையாள அட்டையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் 1,700 பேருக்கு நடமாடும் சேவை மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்றால் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை என்று தங்களை அடையாளப்படுத்தக்கூடிய ஏதாவது ஒரு ஆவணம் சமாப்பிக்கப்பட்டது. அதிலும் கட்டாயம் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். அனைவருக்கும் வழங்க முடியாத நிலையில் அந்த நடைமுறை தவிர்க்கப்பட்டது.

அத்துடன் இந்த நடமாடும் சேவையை தேர்தலுக்காக பப்ரல் அமைப்பு மேற்கொள்ளவில்லை என்றும் பிரதேச அபிவிருத்திகள் அடைய வேண்டும் என்றால் பொது மக்களிற்கு முக்கியமான இவ்வாறான ஆவணங்களும் தேவை என்பதைக் கருத்திக்கொண்டே இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-தமிழ் மிரர்

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com