Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள், விளையாட்டு » வடக்கின் போரில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையே 105ஆவது தடவையாக இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் இன்று இரு அணிகளும் வெற்றி தமக்கே என்ற துடிப்புடன் களமிறங்கிய போதிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டு விக்கெட்டுக்களினால் நான்காவுது தடவையாக தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு ஓவர்களில் 08 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 02 ஓவர்களில் 02 ஓட்டங்களை மட்டும் இறுதி நேரத்தில் பெற்ற நிலையில் நேற்றைய போட்டி நிறைவு பெற்றது.

இன்று ஆறு ஓட்டங்களுக்காக முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 06 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாட இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றி வெற்றி இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் யாழ்ப்பாணம் களத்தடுப்பிலும் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரன் டர்வின் சென்ஜோன்ஸ் கல்லூரி வீரன் சத்தியேந்திரன் வீசிய பந்தை தடுத்து விளையாடி முதல் ஓவரில் ஒரு ஓட்டத்தை மட்டும் பெற்றார்.

இரண்டாவது ஓவரை சஞ்சிவன் வீச அதற்கு ஒரு நான்கு ஓட்டத்தை அடித்து டார்வின் ஓட்டங்களை சமப்படுத்திய நிலையில் இரண்டாவது ஓவர் நிறைவு பெற்றது.

ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் மூனறாவது ஓவர் ஹரிவதனனினால் வீசப்பட்டபோது மூன்றாது பந்தை பில்சன் ஓங்கி அடித்து ஒரு நான்கு ஓட்டத்தைப் பெற ஆட்டம் முடிவடைந்தது.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரனாக யாழ்ப்பாணம் மத்திய கல்லாரியைச் சேர்ந்த எட்வேட் எடினும் சிறந்த பந்து வீச்சாளராகவும் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் ஜெரிக்துசாந்தும் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரஜிதன் சிறந்த களத்தடுப்பாளராகவும் சகல துறை விரனாக டக்சனும் தெரிவு செய்யப்பட்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லாரி அணிக்க ஒரு லட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com