Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்.மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டில் 3ஆயிரம் பேர் டெங்கு நோயால் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் மூவாயிரம் பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு படையினரின் ஏற்பாட்டில் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தை யயாட்டி நேற்று யாழ்.புகையிரத வளாகத்தில் சிரமதானப் பணி இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு முன்னெடு க்கப்பட்டு வந்த டெங்கு நோய் ஒழிப்பு நட வடிக்கை மூலம் அது கட்டுப்பாட்டிக்கு கொண்டு வரப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இந்த டெங்கு நோய் தாக்கமானது அதிகமாகவே இருந்து வருகிறது. இலங்கையில் டெங்கு நோய் கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வரப்பட்ட போதும் எதிர் வரும் மாதங்களில் அதாவது ஏப்ரல் மே மாத ங்களில் தென்மேற்கு பருவ மழை காரணமாக இந்த நோய்த் தாக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தில் மட்டும் இங்கு 22பேர் இந்த நோய்த்தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.இவைதவிர மலேரியா நோயின் தாக்கமும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு இந்த நோய் அதிக மாக ஏற்பட்டுள்ளதால் இவர்கள் யாழ்.மாவட் டத்திற்கு போக்குவரத்தினை மேற்கொள் வதன் மூலமும் மீள்குடியேறுவதன் மூலமும் இங்கு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது.

இலங்கையில் நுளம்பினால் ஐந்து வகை யான நோய்கள் பரவுகின்றன.டெங்கு, மலே ரியா, யானைக்கால் நோய், சிக்கன் குனியா, யப்பான் மூளைக் காய்ச்சல் என்பன ஏற்படுகின்றது. எனினும் யாழ்.மாவட்டத்தில் டெங்கு, மலேரியா என்பவற்றின் தாக்கமே அதிகமாக இருந்தது.இவையும் தற்போது கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டுள்ளது.டெங்கு நோயால் 2 பேர் மட்டுமே இந்த வருடத்தில் யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com