Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.மாவட்டத்தில் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் ஐந்து இறங்குதுறைகள் அமைக்கப்படும்

யாழ்.மாவட்டத்தில் கடற்தொழிலாளர்களின் நன்மைகருதி இந்த ஆண்டில் மேலும் ஐந்து இறங்கு துறைகள் அமைக்கப் படவுள்ளன என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் ஜெய்க்கா நிறுவனம் ஆகியன இணைந்து யாழ்.மாவட்ட அபிவி ருத்திக்கான செயலமர்வினை நேற்று நல்லூர் தியாகி அறக் கொடையில் நடத்தியது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் உரை யாற்றுகையில்;

ஜெய்க்கா நிறுவனமானது அண் மையில் நாவாந்துறை மற்றும் காக்கைதீவு ஆகிய பிரதேசங்க ளில் இறங்கு துறைகளை மீனவர் களின் நன்மை கருதி அமைத்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த நிறுவனத் தால் யாழ்.மாவட்டத்தில் மேலும் ஐந்து இறங்கு துறைகள் அமைக் கப்படவுள்ளன.இதுமட்டுமின்றி இந்த நிறுவனத்தால் யாழ்.போதனா வைத்தியசாலை புனரமைக்கப் பட்டு வருகின்றது.இவை தவிர விவ சாயம்,கடற்தொழில் போன்றவற்றிக் கும் பல உதவிகளை வழங்கிவரு கின்றது. இதேவேளை இந்த ஆண்டில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் பயிற்சிக் கல்லூரியயான்றை அமைக்க இந்த நிறுவனம் முன்வந்துள் ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பயிற்சிப் பட்டறை யின் நோக்கம் யாழ்.மாவட்டத்தில் உள்ள அபிவிருத்திசார் வளங்களை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத் தித் திட்டங்கள் எந்த வகையில் இடம் பெறலாம் என்று ஆராய்வதேயாகும்.இந்த வகையில் ஜெய்க்கா மேலும் யாழ்.மாவட்டத்தில் மீள் குடி யமர்ந்த 6 லட்சத்து 14ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டிய தேவையுள்ளது. அத்தோடு உயர்பாதுகாப்பு வல யங்கள் என முன்பு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 75ஆயிரத்து 799பேர் மீள் குடியமர்ந்துள்ளனர். இதில் 25 ஆயிரம் குடும்பங்கள் அடங்கும்.

வடமராட்சி கிழக்கு,வலிகாமம் போன்ற பகுதிகளில் மக்களை மீள் குடி யமர்த்த தடையாக உள்ள மிதி வெடி கள் அகற்றும் பணிகள் 40வீதம் பூர்த் தியாகியுள்ளன.இதேவேளை 60ஆயிரம் பேர் இன்னும் மீள் குடியமர்த்தப்பட வேண் டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக் கது.அதுமட்டுமன்றி கடந்த வருடம் 6ஆயிரத்து 900பேர் வடமராட்சி கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 15கிராம சேவையாளர் பிரிவினுள் இன்னும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளது. அத்தோடு இந்த மீள் குடியேறும் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதேவேளை விவசாயம் மற்றும் அபிவிருத்தி சார்ந்த 34 திட்டங்கள் எங்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 471.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி,விவசாயம்,கைத்தொழில் போன்ற துறைகளுக்கான உதவியுடன் மீள்குடி யேற்றத்திற்கும் பல உதவிகளை ஜெய்க்கா நிறுவனம் வழங்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com