Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.மாநகர சபைக்குட்பட்ட 4 வீதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டுவதற்கு தீர்மானம்

மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஒரு வீதிக்கு ஏற்கனவே சூட்டப் பட்டிருந்த பெயருக்குப்பதிலாக வேறு பெயரையும் , பெயர் சூட்டப் படாதிருந்த 3 வீதிகளுக்கு புதிய பெயர்களையும் சூட்டுவது என யாழ்ப்பாணம் மாநாகர சபை ஏகம னதாக தீர்மானித்துள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோ. பற்குணராசா அறிவித் துள்ளார்.

வீதிப்பெயர் மாற்றம் மற்றும் பெயரிடப்படாத வீதிகளுக்கு பெய ரிடுதல் தொடர்பாக பொதுமக்க ளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை அடுத்து வழமை யான நடைமுறைகளைப் பின் பற்றி வீதிப் பெயர் மாற்றம் மற்றும் புதிதாக பெயரிடுதல் ஆகியன தொடர்பாக பத்திரிகை விளம்பரம் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைகள் /ஆட்சேபனைகள் / ஒப்புதல்கள் போன்ற சபையின் மாதாந்தக்கூட்டத்தில் நன்கு பரிசிலிக்கப்பட்டு கீழ்க் காணும் விபரப்படியாக வீதிகளுக்கு பெயர் சூட்டுவது என முடிபு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய ,பருத்தித்துறை வீதியையும் , காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் வீதிக்கு பாவனையில் இருந்த அரசடி வீதி என்ற பெயரை கார்த்திகேசன் வீதி எனப் பெயர் மாற்றம் செய்வது எனவும் ,

பருத்தித்துறை வீதியையும், சங்கிலியன் வீதியையும் இணைக்கும் புதிய வீதிக்கு பண்டாரமாளிகை வீதி எனப் பெயரிடுவ தெனவும் , கோவில் வீதியில் இருந்து துர்க்கா மணிமண்டபத்திற்கு தெற்குப் புறமாகச் செல்லும் சிறிய ஒழுங்கைக்கு செல்வநாயகம் ஒழுங்கை எனப் பெயரிடுவது எனவும்,

பருத்தித்துறை வீதிக்கும் கோவில் வீதிக்கும் இடைப்பட்ட சட்ட நாதர் வீதியில் வலப்பக்கமாக வுள்ள ஒழுங்கைக்கு சட்டநாதர் ஒழுங்கை எனப் பெயர் சூட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானத்தை நடை முறைப்படுத்துவதற்கான அங்கீ காரம் கெளரவ வடமாகாண ஆளுநரிடமிருந்து கிடைக்கப்பெற்றதும் இப்புதிய பெயர்களை பாவனைக் குட்படுத்துவதற்கான துரித நட வடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com