Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் மத்திய கல்லூரி மாணவர் விடுதி மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மாணவர் விடுதியானது மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதினால் இவ் மாணவர் விடுதியில் இணைந்து கல்வியை கற்றுக்கொள்ள விரும்புகின்ற மாணவர்களுக்கான விண்ணப்பபங்கள் அகில இலங்கை ரீதியில் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் அறிவித்துள்ளார்.

கல்லூரியின் மாணவர் விடுதி மீள ஆரம்பிபக்கப்படுவது தொடர்பாக மேலும் கல்லூரி அதிபர் கருத்து தெரிவிக்கும் போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியானது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தினை கொண்டமைந்த கல்லூரியாக விளங்குகின்றது. இக்கல்லூரியின் மாணவர் விடுதியும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்துடன் நீண்ட காலங்கள் தொடர்ச்சியாக இயங்கிவந்துள்ளது . இவ்விடுதியில் இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் இருந்து வருகைதந்து மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வியினை மேற்கொண்டு கல்வியில் உயர்பெறுபேற்றினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இடையில் சிறிது காலம் நாட்டில் ஏற்பட்டட அசாதாரண சூழ்நிலை காரணமாக விடுதியின் செயற்பாடு முடக்கநிலையில் செயற்பாடற்று காணப்பட்டது.

செயல் நிலையற்று இருந்த விடுதியினை மீண்டும் ஆரம்பித்து செயல்முனைப்பூட்டும் வகையில் முன்னைய அதிபராக இருந்த எல்.ஓங்கார மூர்த்தி அவர்கள் மீளவும் ஆரமப்பித்து பழைய மாணவர்களதும் கல்லூரி ஆசிரியர்களதும் ஒத்துழைப்படன் மாணவர் விடுதியை நடாத்தி வந்துள்ளார். குறிப்பிட்ட சில வருடங்கள் இங்கி வந்த மாணவர் விடுதியானது வசதியீனங்களின் காரணமாக அதன் செயல்நிலை குன்றிய நிலையில் தற்காலிகமாக மாணவர் விடுதி மூடப்பட்டது.

இவ் மாணவர் விடுதியை மீளவும் இயக்குவதற்கு கல்லூரியின் லண்டன் பழைய மாணவர்சங்கம் முழு ஒத்துழைப்பையும் நிதி வழங்கலையும் வழங்கவுள்ளதால் மீளவும் வரலாற்றுப் பெருமை கொண்ட மாணவர் விடுதியானது ஆரம்ப்பிக்கப்பட்வுள்ளது. இவ்மாணவர் விடுதியில் தங்கி கல்வியை மேற்கொள்ளள விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் அகில இலங்கை ரீதியில் கோரப்பட்டுள்ளன.

இவ்விடுதியில் தங்கி கல்வியினை மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டு விண்ணப்பிக்கின்ற மாணவர்கள் நாட்டினுடைய எப்பாகத்தில் இருந்தும் விண்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கின்ற மாணவர்களில் கல்லூரியின் தேவைப்பாடு கருதி மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். எனவே மாணவர் விடுதியில் தங்கி கல்வியினை கற்க விரும்புகின்ற மாணவர்களை உடனடியாக விண்ணப்பங்ளை சமர்ப்பிக்கமாறு அதிபர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com