Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ். மக்களின் சுகாதார சேவைகள் முதல் நிலையில்

வடமாகாணத்தில் யாழ். மக்களின் சுகாதார சேவைகள்; முதல் நிலையில் இருப்பதாகவும், வைத்தியர் பற்றாக்குறை முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வைத்தியர்களின் பணி தொடர்பான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,யாழில் 17 நோயாளிக்கு ஒரு வைத்தியர் என்ற நிலையில் வைத்திய சேவைக்கான மனித வள ஆளனிகள் போதுமானதாக காணப்படுகின்றது. மருத்துவ சேவையை அர்பணிப்புடன் செய்வதற்கு தென்பகுதி வைத்தியர்களும் யாழுக்கு வருகை தந்துள்ளனர்.

யாழ்.மக்களின் மருத்துவ சேவை ஏனைய மாவட்டங்களை விட உயர் நிலையில் இருப்பதுடன்; அவர்களின் மருத்துவத் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவிதமாக வைத்தியர்கள், தாதியர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் அர்பணிப்புடன் கூடிய சேவையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மக்களின் மருத்துவத் சேவையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com