Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.பொது நூலகத்தில் இலங்கை வரலாற்றை வெளிப்படுத்தும் கண்காட்சி

260 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றை மீட்டிப் பார்த்தல் எனும் கண்காட்சி யாழ். பொது நூலகத்தில் கடந்த புதன் கிழமை ஆரம்பமாகி நடை பெற்று வருகின்றது.

எதிர் வரும் 19 ஆம் திகதி புதன் கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரை இலவசமாகப் பார்வையிடமுடியும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பிரிட்டன் தெரிவுகளில் இருந்து பெறப்பட்ட 1640 தொடக்கம் 1900 வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான காட்சித் தோற்றங்களை இந்தக் கண்காட்சி கொண்டுள்ளது.

பிரிட்டன் நூலகம் மற்றும் பிரிட்டன் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது இந்தக் கண்காட்சி.

இந்தக் கண்காட்சி பாடசாலை மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைப் பாடசாலை மாணவர்கள் காலை 9 மணி தொடக்கம் பார்வையிட முடியும். பொதுமக்கள் மதியம் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை பார்வையிட முடியும்.

கண்காட்சியைப் பார்வையிட விரும்பும் பாடசாலை மாணவர்கள் தமது அதிபரூடாக 0714977019 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமக்கான பார்வையிடும் நேரத்தை முன் கூட்டியே ஒழுங்கு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றை உள்ளடக்கிய 150 இற்கும் மேற்பட்ட இலத்திரணியல் உருமாதிரியான தோற்றங்களைக் கொண்ட ஓலைச்சுவடிகள், வரைபடங்கள், அச்சுவடிவங்கள், சித்திரங்கள், நிழற்படங்கள் ஏனைய கலைத்தொழிற்பாடுகளமைந்த பொருள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்களால் ஆவணப்படுத்தப்பட்ட தரைத்தோற்றங் களை, கலாசாரங்களை மற்றும் இந்த நாட்டு மக்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.

பிரிட்டன் அமைப்புக்கள் மற்றும் ஆசிய, ஆபிரிக்கப் பங்காளர்களுக்கு இடையிலான இருதரப்புத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகத் திரட்டல்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நிதியுடன் பிரிட்டன் மற்றும் இலங்கை அருங்காட்சியகத்தினரின் இணை அனுசரணையுடன் இந்தக் கண்காட்சி இடம் பெற்று வருகிறது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com