Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் பாடசாலை மாணவர்களுக்கு துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கருத்தரங்கு

மருதங்கேணி பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் மாணவர்களிடையே சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று குடத்தனை மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்த தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உக்திகளை கையாளுதல் மற்றும் சிறுவர் உரிமை தொடர்பாகவும், மாணவர்களின் கடமைகள், ஒழுக்க நெறிகளை கடைப்பிடிப்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டு, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விளக்கப்படமும் காண்பிக்கப்பட்டது.

இப்பாடசாலையில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமது சந்தேகங்களையும், தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் கேள்விகள் மூலமும் பதில்கள் மூலமும் தெளிவுபடுத்திக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விளக்கங்கள் யாழ். சென் ஜேம்ஸ் வித்தியாலயம் மற்றும், புனித சாள்ஸ் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கு.கௌதமன், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அதிகாரி, உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com