Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் நியமனம்

யாழ். பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக பேரா சிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் கடந்த 28ஆம் திகதி அமு லுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ நியமனம் வழங்கியுள்ளார். இதன் மூலம் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையை பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் பெறுகிறார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கனின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் முடிபடைந்த நிலையில் புதிய துணைவேந்தருக்கான மூவரின் பெயர்களை தேர்தல் மூலம் யாழ்.பல்கலைக்கழகப் பேரவை சிபார்சு செய்தது. இதில் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம், பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் ஆகியோரின் பெயர்களே பேரவையினால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் நேற்று முன்தினம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கியுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது.

துணைவேந்தர் நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் ஆரம்பக் கல்வியை சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் பின் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியைப் பயின்றார். தமிழ்நாடு அபினாசி லிங்கம் மனையியல் கல்லூரியில் உயிர் இரசாயனவியலைப் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து கொழும்புப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய பேராசிரியர் பாலசுப்பிரமணியத்தின் வழிகாட்டலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு முது விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றார்.

பின்னர் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியாற்றியதுடன் யாழ்.பல்கலைக் கழகத்துடனும் சுவீடன் லூண்ட் பல்கலைக்கழகத்துடனும் இணைந்த ஆய்வினை மேற் கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இணைப் பேராசிரியராக இருந்து 1998ஆம் ஆண்டு யாழ். பல்கலைக் கழத்தினால் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. பின் 2000ஆம் ஆண்டுமுதல் 03 வருடங்கள் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் இன்றுவரை மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரிராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com