Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.பல்கலைக்கழகத்தின் தேவைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. நேரில் வந்து ஆராய்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நில வும் பற்றாக்குறைகள் விரைவில் நிறைவு செய்யப்படும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா உறுதியளித்துள்ளார்.

கடந்த மாத இறுதியில்யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த அவர் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், நிர்வாக உத்தி யோகத்தர்கள் மற்றும் மாண வர்களை தனித் தனியே சந் தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்புக்களின்போது விரிவுரையாளர்களின் பற்றாக் குறை, சுகாதார கட்டமைப்பு, நிர்வாக அலுவலர்களின் வெற்றிடம், மாணவர்களுக்கான விடுதியில் காணப்படும் குறை கள் என்பன தொடர்பாக விளக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது இப் பற்றாக்குறைகள் விரைவில் நிவர்த்தி செய் யப்படும் என அவர் உறுதியளித்தார். அதன் பின்னர் கைதடி சித்த மருத்துவமனை சென்ற அவர், அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த துடன் சித்த மருத்துவத் துறைக்கு 5 மாடிக் கட்டிடம் ஒன்று அமைத்துக் கொடுப்பது தொடர் பாகவும் ஆராய்ந்தார். அத்துடன் இராமநாதன் நுண்கலைத் துறையையும் சித்தமருத்துவத் துறையையும் பீடங்களாக மாற்றுவதற்கு துணைவேந்தர் முன்வைத்த வேண்டுகோளை தான் ஆதரிப்பதாகவும் அது தொடர்பில் மீண்டு மொருமுறை எழுத்துமூல வேண்டுகோளை சமர்ப்பிக்குமாறும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com