Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள், விளையாட்டு » யாழ் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் கொக்கி சுற்றுப் போட்டி இன்று ஆரம்பம்

யாழ் பல்கலைக்கழக விளையாட்டுப்  பிரிவினரால் நடாத்தப்படும், யாழ் மாவட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டுக்கழக ஆண்கள் அணிகளுக்கிடையிலான கொக்கி சுற்றுப் போட்டி பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

பதினொரு பேர்களைக் கொண்ட  இச் சுற்றுப் போட்டியில் பங்கு பெறும் அணிகளாக யாழ் ஸ்ரார் விளையாட்டுக்கழகம், ஓல்ட் கோல்ட் விளையாட்டு கழகம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி, யூனியன் விளையாட்டுக் கழகம், கிராஸ்கொப்பர்ஸ் விளையாட்டு கழகம், சென்றல்லைற்ஸ் விளையாட்டு கழகம், சென்ஜோன்ஸ் கல்லூரி,  வின்னர்ஸ் விளையாட்டு கழகம், ஜோன்இயன்ஸ் விளையாட்டு கழகம், யூனியன் கல்லூரி மற்றும் யாழ் பல்கலைக் கழகம் ஆகியன.

இப் போட்டி இன்றய தினம் ஆரம்பமாகி எதிர்வரும் 26ம் திகதி வரை நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி நடைபெறும்  திகதி பின்னர் அறிவிக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக விளையாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றய தினம் ஆரம்ப சுற்றில் ஓல்ட் கோல்ட் விளையாட்டு கழக அணியும்  மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியும்  மோதுகின்றன. 24ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யூனியன் விளையாட்டுக் கழகமும் மோதுகின்றன. 25ம் திகதி சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் வின்னர்ஸ் விளையாட்டுக் கழகமும், 26ம் திகதி  ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் யூனியன் கல்லூரியும் மோதவுள்ளன.

ஒவ்வொரு அணிகளுக்குமான போட்டிகள் மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com