Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்.நூலகத்திற்கு 400 இறுவெட்டுக்கள் அன்பளிப்பு

சிறுவர்களின் கல்வித் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான 400 இறுவெட்டுக்களை யாழ்.நூலகத்திற்கு சிங்கப்பூர் இன்டநேசனல் பவுன்டேஷன் நிறுவனம் வழங்கியுள்ளதாக யாழ்.நூலக பிரதம நூலகர் தெரிவித்தார்.

யாழ்.நூலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ். நூலகத்திற்கு வெளிநாட்டவர்கள் அதிகளவில் நூல்களை அன்பளிப்பு செய்து வருகின்றனர். தற்போது யாழ்.நூலகத்தில் 1 இலட்சம்; நூல்கள் பாவனையில் உள்ளன.

முன்னைய காலங்களை விட யாழ்.நூலகத்தை பயன்படுத்துவோரின் தொகை அதிகரித்துள்ளது.

சிறுவர்களின் பொழுதுபோக்கிற்கான சிறந்த நூல்கள் யாழ்.நூலகத்தில் இருக்கின்றன. பெற்றோர்கள் சிறுவர்களை அழைத்து வந்து நூல்களை படிக்க வைப்பது குறைவாக இருக்கின்றது.

யாழ்.நூலகதின் நூல்களைப் பாதுகாப்பதற்கு ‘மைக்கிரோ பிலிம்’ தற்போதைய தேவையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com