Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.நகரில் நேற்று அழகு மாடம் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் உள்ள அலங்காரப் பொருள்கள் விற்பனை நிலை யம் ஒன்றில் நேற்று முற் பகல் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான உடை மைகள் எரிந்து நாசமாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், சுவாமிப் படத்தட்டில் இருந்த விளக்குத் தீப்பற்றி இருக்கலாம் எனவும், தைப் பொங்கல் தினமாக நேற்று இருந்தமையால் யாராவது வெடி கொளுத்தி எறியும்போது கடையின் கூரை அல்லது ஏதாவது ஒரு பகுதியினூடாக அது உட்சென்று தீப்பிடித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.

இது சம்பந்தமாக யாழ்.பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.குறித்த விற்பனை நிலையத்தில் விளக்கேற்றிவிட்டுப் பின்னர் அதனை அணைத்துவிட்டு நிலையத்தைப் பூட்டி விட்டு அதன் உரிமையாளர் சென்றுவிட்டார் அதன் பின்னர் கடையின் உட்புறத்தில் தீப்பிடித்து புகை மண்டலம் எழுந்தபோதே வெளியில் இருந்தவர்களுக்கு விவரீதம் தெரியவந்தது.

இதுபற்றி அதன் உரிமையாளருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபை தீயணைக்கும் பிரிவுக்கும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.அதைத் தொடர்ந்து விற்பனை நிலையத்திலிருந்த எஞ்சிய பொருள்கள் மீட்டெடுக்கப்பட்டன. பல லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டன என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொலிஸார் விசாரணைகளை நடத்து கின்றனர்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com