Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்.சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை குறைவு – வியாபாரிகள் கவலை

யாழ்ப்பாணச் சந்தையில் நுகர்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய சந்தையாகக் காணப்படும் திருநெல்வேலி, மற்றும் மருதனார்மடம் சந்தையையே அனைவரும் நாடிச்
செல்வதாகவும், யாழ்.நகர்ப பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே இங்கு கொள்வனவு செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட இந்தச் சந்தையில் 40ற்கும் மேற்பட்ட மரக்கறி, பழக் கடைகள் காணப்படுகின்றன.இங்குள்ள மரக்கறி வியாபாரிகள், மரக்கறிகளை திருநெல்வேலிச் சந்தையிலிருந்தே கொள்வனவு செய்து சிறிய இலாபத்துடன் விற்பனை செய்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் பனை உற்பத்திப் பொருட்களுக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுவதாகக் கூறும் வியாபாரிகள், தென்பகுதி வர்த்தகர்கள் கிழமைக்கு ஒரு தடவையேனும் யாழ்.சந்தைக்கு வருகைதந்து இவற்றைக் கொள்வனவுசெய்து செல்வதுடன், யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் பனை உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து செல்வதாகவும் கூறுகின்றனர்.

சந்தையில் வியாபாரிகள் காலை 6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியும் எனவும், வியாரம் செய்யும் இடத்திற்கு குத்தகையாக நாளொன்றுக்கு 40 ரூபாவினை அறவிடுவதாகவும் சந்தைக் குத்தகைதாரர் குறிப்பிட்டார்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com