Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்பவில்லை! – யாழ்.வணிகர் கழகம்

யாழ். குடாநாட்டில் பொருட்களுக்குத் தட் டுப்பாடு இல்லை. பொருட்கள் போதியளவு இருப்பில் உள்ளன என யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்தார்.

குடாநாட்டில் பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து பத்திரிகையாளர் சந்திப்பொன்று நேற்று யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையி லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல பாகங்களிலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடாநாட்டில் பொருட்கள் விலையேறும் சாத் தியக்கூறு இருப்பதாக பேசப்படுகின்றது. ஆனால் அவ்வாறான நிலை எதுவும் இல்லை.

அரிசி வகைகள் அவற்றின் தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படும். குறிப்பாக நாட்டரிசி 60 ரூபாய் தொடக்கம் 85 ரூபாய் வரையும், சம்பா 75 ரூபாய் தொடக்கம் 90 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இதேவேளை சீனி மொத்த விலையில் 100 ரூபாயிற்கும் சில்லறை விலையில் 105 ரூபாயிற்கும் விற்கப்படும். அத்தோடு அரிசி விலை தொடர்பாக யாழ்.மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதி காரசபை அதிகாரிகளால் அண் மையில் அறிவிக்கப்பட்ட வர்த்தமா னியின் விலைக் கட்டுப்பாடு ஏற்க முடியாதது. அவர்களின் விலைக் கட்டுப்பாட்டிற்கு உகந்ததாக அரிசி கொள்முதல் செய்து தரப்படுமா யின் அந்தக் கட்டுப்பாட்டிற்கு உட் பட்டு விற்பனை செய்யத் தயாராகவுள்ளோம்.

கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கொழு ம்பு விலையிலும் குறைவாக இங்கு விற்கப்படுகின்றது. குறிப்பாக பால்மாப் பெட்டிகள் கொழும்பு விலையிலும் குறைவாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.பல நோக்குக் கூட்டுறவுச் சங் கங்கள் செயலிழந்துள்ள நிலையிலும் அவற்றை விடக் குறைவாக யாழ்.வர்த்தகர்கள் பொருட்களை விற்றுவருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்ட இந்த அழிவுகள் காரணமாக குடாநாட்டில் பொருட் களின் விலை அதிகரிக்காது, இருப் பில் உள்ளவரை நியாயமான விலை க்கே பொருட்கள் விற்கப்படும்.போக்குவரத்து சீரான முறையில் உள்ளதால் பொருட்கள் போதிய ளவு இறக்குமதி செய்யப்படுகின் றது. இதனால் மக்கள் பொருட்கள் விலையேறும் என அச்சப்படத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com