Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழ்.கல்விப் பணிப்பாளராக செல்வராஜா

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக, வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் வி.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக ஹாட்லி கல்லூரி அதிபர் கே.தெய்வேந்திர ராஜா நியமனம் பெற்றுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் தகவல்களிலிருந்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளராக வி.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 6 வருடங்களாக வடமராட்சி கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளதுடன் யுத்த காலத்தில் வடமராட்சி கிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளராக வடமராட்சி அபிவிருத்தி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புஸ்பலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத் தீவு, தீவகம் மற்றும் தென் மராட்சி கல்விப் பணிப்பாளர்களுக்கும் விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

– வலம்புரி

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com