Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ் – கண்டி வீதிப் புனரமைப்பில் 50% பூர்த்தி

சுமார் 321 கிலோ மீற்ரர் நீளம் கொண்ட யாழ் – கண்டி (ஏ9 வீதி) நெடுஞ்சாலைப் புனரமைப்பு வேலைகளில், ஐம்பது சதவீதமானவை பூர்த்தியடைந்து விட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏழு மாவட்டங்களின் ஊடாகச் செல்லும் மிக நீண்ட நெடுஞ்சாலையான ஏ9 வீதியின் புனரமைப்பு வேலைகள், 2002 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், தொடர்ந்து இடம் பெற்ற உள்நாட்டு மோதல்களினால் பளை – ஓமந்தை வரையான நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்தது.

இதனை புனரமைக்கவென ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியதுடன், புனரமைப்பு வேலைகள் 2009 ல் மீண்டும்
ஆரம்பிக்கப்பட்டன. இதில் இன்னும் மீதமாக உள்ள புனரமைப்பு வேலைகள் வருகின்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் பூர்த்தியடையும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரட்டங்களினால் ஏ9 வீதியானது, 1984 ம் ஆண்டு மூடப்பட்டு 2002 பெப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது. எனினும், மீண்டும் ஆரம்பமான போராட்ட நிலமைகளினால் 2006 ஒக்டோபரில் மூடப்பட்டதுடன் மீண்டும் மக்கள் பாவனைக்கென 2009 இறுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com