Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழ்ப்பாண வாழ்க்கைச் செலவு மேலும் 10 ரூபாவால் உயர்வு

யாழ். மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு கடந்த வருட இறுதியில் இருந்ததை விட மேலும் 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இலங்கையின் சராசரி வாழ்க்கைச் செலவிலும் பார்க்க இது 250 ரூபா அதிகமெனப் புள்ளி விவரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குரிய வாழ்க்கைச் செலவுப் பட்டியல் அரச புள்ளி விவரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
இலங்கையில் ஒரு மனிதனின் ஒரு மாதத்துக்கு உரிய ஆகக்குறைந்த சராசரி வாழ்க்கைச் செலவு இந்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆயிரத்து 316 ரூபாவாகக் காணப்படுகின்றது. இது கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 3 ஆயிரத்து 307 ரூபாவாக இருந்தது.

யாழ். மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு தேசிய மட்டச் சராசரி வாழ்க்கைச் செலவை விட 250 ரூபா அதிகமாகும். யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் டிசெம்பர் மாத வாழ்க்கைச் செலவு 3 ஆயிரத்து 555 ரூபாவாகக் காணப்பட்டது. இது 10 ரூபாவினால் அதிகரித்து தற்போது 3 ஆயிரத்து 565 ரூபாவாக உயர்ந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களே வாழ்க்கைச் செலவுக் கணிப்பீட்டில் உள்வாங்கப்படுகின்றன. இதில் வவுனியா மாவட்டத்தின் வாழ்க்கைச் செலவு 3 ஆயிரத்து 422 ரூபாவாகக் காணப் படுகின்றது.

தலைநகர் கொழும்பின் வாழ்க்கைச் செலவு 3 ஆயிரத்து 551 ரூபாவாகக் காணப்படுகின்றது. இலங்கையில் வாழ்க்கைச் செலவு கூடிய மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகின்றது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com