Subscribe:Posts Comments

You Are Here: Home » விளையாட்டு » யாழ்ப்பாணத்துக்கு மேலும் 2 தங்கம் – மகாஜனா மற்றும் அருணோதயா கோலூன்றிப் பாய்தலில் முதலிடம்

தேசிய மட்ட பாடசாலைகளுக் கிடையிலான தடகளப் போட்டிக ளில் நேற்று நடைபெற்றப் போட்டி யில் யாழ்ப்பாணத்துக்கு இரண்டு தங்கப்பதக்கங்கள் கிடைத்துள் ளன. கோலூன்றி பாய்தலில் 21 வயது ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவன் ரி.மோகுநாத்தும் கோலூன்றி பாய்தலில் 17 வயது பெண்கள் பிரி வில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி ஒ.பவித்திராவும் தங்கப் பதக்கம் வென்றனர்.

தேசியமட்டப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகி கொழும்பு சுகததாஸ விளையாட் டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 21 வயது ஆண்கள் பிரிவினருக் கான கோலூன்றி பாய்தல் போட்டியில் தெல் லிப்பழை மகாஜனாக் கல்லூரி வீரர் ரி.மோகு நாத் 3.90 மீற் றர் உயரம் பாய்ந்து முதலிடத் தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவ் வருடம் நூற்றாண்டு விழாக் கண்ட தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு ரி.மோகுநாத் தேசிய மட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தது மேலும் பெரு மையடையச் செய்துள்ளது.

இதேவேளை நேற்று நடைபெற்ற 17 வயது பெண்கள் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோத யாக்கல்லூரி வீராங்கனை ஒ.பவித்திரா 2.50 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அளவெட்டி அருணோத யாக் கல்லூரி கோலூன்றிப் பாய்தலில் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

அத்துடன் தேசியமட்ட தடகளப்போட்டியில் இது வரை யாழ். மாவட்டம் சார்பில் மூன்று தங்கப்பதக்கங்கள் பெறப்பட்டது.

நன்றி:வலம்புரி

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com