Subscribe:Posts Comments

You Are Here: Home » சிறப்புக் கட்டுரைகள் » யாழ்ப்பாணத்தில் இரண்டு இலட்சம் பேர் புதிய தொழில் நிறுவனங்களின் வருகைக்காக காத்திருப்பு

யாழ்ப்பாணத்தில் வேலையற்ற இரண்டு இலட்சம் பேர் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் பூரணச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட வணிகச் சந்தையை அடுத்து பல இந்திய வணிக நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

ஆனால் அவர்கள அதற்கான திட்டங்களை வகுத்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சில காலம் பிடிக்கும்.

இந்திய வணிக நிறுவனங்கள், கட்டட நிர்மாணப் பொருட்கள், இயந்திரவேலைகள், உற்பத்தித் துறைகளில் முதலிடுவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

இங்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் வணிக நடவடிக்கைளில் ஈடுபடும்.

யாழ்ப்பாணத்தில் சந்தை வாய்ப்புகள் இருக்கின்ற போதும் யாழ். நகரில் பணியகக் கட்டங்களுக்கான இடம் பற்றாக்குறையாக இருப்பது ஒரு சிக்கல் தான்.

இதனால் புதிய வணிக நடவடிக்கைகளை நகருக்கு வெளியில் உள்ள கட்டடங்களிலேயே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. நகருக்கு வெளியே பெருமளவு நிலம் வாடகைக்கோ விற்பனைக்கோ உள்ளது.

யாழ். நகரில் பணியகக் கட்டடம் ஒன்றின் மாதவாடகை 50,000 தொடக்கம் 100,000 வரை போகிறது.

எதிர்காலத்தில் ஐந்து ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைக்க இணங்கியுள்ளன.

அவர்கள் இப்போது அதற்கான நிலங்களைத் தேடிக் கொண்டிக்கின்றனர். நிலம் தெரிவு செய்யப்பட்டு அங்கு அடிப்படைக் கட்டுமானப் பணிகள் முடிவுற்றதும் ஆடைதயாரிப்பு நிறுவனங்கள் திறக்கப்படும்.

ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் மூலமே யாழ்ப்பாணத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

தற்போது 200,000 பேர் யாழ்ப்பாணத்தில் வேலையற்றிருக்கின்றனர். அவர்கள் புதிய தொழில் நிறுவனங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

இந்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் சுமார் 35,000 பேருக்கு யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி: புதினப்பலகை

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com