Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழில் பழைய பித்தளைக்குத் தட்டுப்பாடு: வார்ப்புத் தொழிலாளர்கள் சிரமம்

வார்ப்பு வேலைகளுக்குப் பயன்படும் பழைய பித்தளைக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவ தாகத் தொழிலாளர்கள் தெரிவிக் கின்றனர்.
முன்னர் கிலோ 250 ரூபா விற்று வந்த பழைய பித்தளை இப்போது 400 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.
விலையேற்றம், தட்டுப்பாடு காரணமாக வார்ப்புத் தொழிலை நம்பியிருக்கும் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் பாதிப்ப டைந்துள்ளனர்.
பழைய பித்தளைகளை உருக்கி பூட்டு, பிணைச்சல், திறாங்கு மற்றும் ஆலயங்களுக்கு தேவை யான பொருள்களை உற்பத்தி செய்வது யாழ்ப்பாணத்தில் கைத் தொழில் முயற்சியாகப் பலகால மாக நடைபெற்று வருகிறது.
உடைந்த பாத்திரங்கள், கழி வுப் பித்தளைப் பொருள்கள் பொது மக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டு தென்னிலங் கைக்கு கொண்டு செல்லப்படு வதாகவும் அங்கிருந்து இந்தியா வுக்கு அனுப்பப்படுவதாகவும் வார்ப்புத் தொழிற்சாலை உரிமை யாளர் தெரிவித்துள்ளனர்.
யாழ்.குடாநாட்டிலிருந்து பழைய பித்தளை, அலுமினியப் பொருள்கள் வெளியிடங்களுக் குக் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி தொழில் முயற்சிக்கு உதவ வேண்டுமென தொழி லாளர் தரப்பில் கோரிக்கை விடப் பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com