Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » யாழில் தொழில் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு கண்காட்சி

Jaffna_exibitionசிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

யாழ். வர்த்தக தொழில்துறை மன்றமும் அரச தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து யாழ். பிள்ளையார் விருந்தினர் விடுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த கண்காட்சியினை நடாத்துவது தொடர்பாக நேற்று யாழ். வர்த்தக தொழில் துறை மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடமபெற்றது.

இச்சந்திப்பின் போது, வியாபார மற்றும் தொழில்துறை சமூகத்தினரையும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனர்களையும் ஒன்றாக இணைத்து தொழில் நுட்பத்தின் பாவனையூடாக வியாபார செயற்பாடுகளை இலகுவாக மேம்படுத்துவதற்கும் சந்தை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் நடவடிக்கைகளை வியாபார நிலையங்கள் மேற்கொள்வதற்கான நோக்கத்துடன், இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

வட பகுதி அபிவிருத்தி பாதையில் அடி எடுத்து வைத்துள்ளதாலும், முதலீடுகளுக்கான சிறந்த களமாக தற்போது விளங்குவதுடன், பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கான புதிய முயற்சியாக இந்த கண்காட்சி அமைகின்றது.

உள்நாட்டு வியாபாரிகள் தமது வியாபாரத்தினை வெற்றிப்பாதை நோக்கி கொண்டு செல்வதற்கு இத் தொழில் நுட்ப அறிமுகம் சிறந்த களமாக அமையுமென்றும் இக்கண்காட்சியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டாளர்களை கண்காட்சியில் கலந்து பயன்பெறுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com