Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் தனது மரணச் சான்றிதழை அரச அதிபரிடம் பெற்றுக்கொண்ட புலம்பெயர்ந்து வாழும் பெண்

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் பெண்ணொருவர் யாழ். அரசாங்க அதிபரைச் சந்தித்து தனது மரணச்சான்றிதழை கேட்டு பெற்றுக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரியின் கணவர் பொய்யான மரணச் சான்றிதழ் உட்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கி மூலம் கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணிற்கு உரித்தான சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்து பெண்ணினது ஏற்கனவே இறந்த தகப்பனை தகவலாளரின் பெயர் எனக் குறிப்பிட்டு குறித்த பெண்ணின் சகோதரியின் கணவன் சட்டத்தரணி ஒருவரையும் பயன்படுத்தி யாழ் செயலக காணிப் பதிவாளருடைய போலியான றபர் முத்திரை மற்றும் கையெழுத்துக்களையும் பெற்று வங்கிக்கடனைப் பெற்றுள்ளார்.

இச்ம்பவம் தொடர்பில் குறித்த பெண் யாழ். அரசாங்க அதிபரை சந்தித்து தனக்கு நேர்ந்த அவலத்தைத் தெரிவித்ததுடன் தனது மரணச் சான்றிதழை பெற்று மீளவும் சுவிஸ் நாட்டிற்குச் சென்றுள்ளதுடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com