Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில் ஜனவரி மாதத்தில் 91 டெங்கு நோயாளர்கள்

யாழில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 91 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

ஏழாலை, நீர்வேலி, மல்லாகம் ஆகிய பகுதிகளில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் காணப்படுகின்றது.
வெட்டப்பட்ட வாழைக்குற்றிகள், கிளுவை மரப்பொந்துகள், வாழைப்பூவிலிருந்து உதிரும் மடல்கள் போன்றவற்றில் தேங்குகின்ற நீரிலிருந்து நுளம்புகள் பெருக்கமடைவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அப்பணிமனை குறிப்பிட்டுள்ளது.

மக்கள் தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருக்கமடையாது தினந்தோறும் கண்காணிப்பதன் மூலமும் காய்ச்சல் நோயாளர்கள் உடனடியாக வைத்தியரை நாடிச் செல்வதன் மூலமும் டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளிலிருந்த தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கூறியுள்ளது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com