Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » யாழில். சட்டவிரோத மின் பாவனையாளர்களிடமிருந்து இழப்பிட்டுத் தொகை 2,24,17,603 ரூபா அறவீடு

யாழில். குடாநாட்டில் சட்டவிரோத மின் பாவனையாளர்களிடமிருந்து இழப்பிட்டு தொகையாக 2 கோடியே 24 இலட்சத்தி 17 ஆயிரத்தி 603 ரூபாய் கிடைத்திருப்பதாக இலங்கை மினசார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் இன்று செய்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

யாழில். கடந்த சனிக்கிழமை முதல் இன்று செவ்வாய்கிழமை மாலை 4 மணிவரை 126 சட்ட விரோத மின் பாவனையாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் எனவும் இவர்களிடம் இருந்து யாழ்.பிராந்திய மின்சார சபைக்கு 2,24,17,603 ரூபாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சட்டவிரோத மின்பாவனையாளர் ஒருவரிடமிருந்து அதிகூடிய இழப்பிட்டுப் பணமாக 10 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் விசேட மின் பரிசோதனையாளர் குழுவினரும் யாழ். பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே 126 சட்டவிரோத மின் பாவனையாளர்கள் பிடிப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com