Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மீண்டும் பறவைக்காய்ச்சல் அபாயம் தடுப்பூசியை ஏற்றுமாறு அறிவுறுத்தல்

இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் (H1N1)நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் யாழ்ப்பாணத்தி லும் அவதானமாக இருக்குமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதற்கான தடுப்பூசியை ஒவ்வொரு பிரிவிலும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குச் சென்று எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதார பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு,

உலகளாவிய ரீதியில் பறவைக்காய்ச்சல் இரண்டாவது முறையாக பரவிவருகிறது. இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் H1 N1 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.நோய் தொற்றும் வீதமும் அதிகரித்துள்ளதால் தொற்று ஏற்படும் சாத்தியக்கூறும் அதிகம் உள்ளது. எனவே காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர், கடற்படையினர், கோழிப் பண்ணையாளர்கள், மக்களுடன் அதிகமாக தொடர்புபடுபவர்கள் மற்றும் சகல வியாபார நிலைய ஊழியர்களும் தமது பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு சென்று எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் அதற்கான தடுப்பூசியை பெற் றுக்கொள்ளவேண்டும் என்றுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com