Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை யாழ்.குடாநாட்டில் அமைக்க வேண்டும் – துணைவேந்தர்

பல்லைக்கழகத்திற்கு தெரிவாகாத மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை யாழ். குடாநாட்டில் அமை க்க வேண்டும் என இந்திய உயரதிகாரி களிடம் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவின் கல்விக் கண்காட்சி நேற்று யாழ். பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமானது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ். குடாநாட்டை பொறுத்தவரை இவ் வாறான கல்விக் கண்காட்சிகள் இடம் பெறு வது அத்தியாவசியமான தொன்றாகும்.அத்தோடு உயர்தரத்திற்கு பின்பு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் பல மாணவர்கள் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாதுள்ளனர்.

இவ்வாறான மாணவர்களுக்கு மேற் கொண்டு உயர் கல்வியை பெற்று தொழில் துறைகளுக்குள் செல்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கக் கூடிய மையங்கள் இங்கு இல்லை. இந்திய அரசாங்கத்தால் இவ்வா றான மையங்கள் இங்கு உருவாக்கு வதன் மூலம் இங்குள்ள மாணவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் உயர் கல்வியை பெறக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். எனவே படித்துவிட்டு தொழிற் துறை களை எதிர்பார்த்து காத்திருக்கும் மாண வர்களுக்கு வழிகாட்டக் கூடிய ஆலோசகர்களை நியமித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவி புரிய வேண்டும்.

மேலும் இளைஞர் யுவதிகள் தவ றான பாதைக்கு செல்வதற்கு இது போன்ற வழி நடத்தல் இல்லாமையே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com