Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் இணைய மையங்கள் – நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர்

மாணவர்களின் கல்விச் செயற்பாடுக ளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இணைய மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என நல்லூர் கோட்டக் கல் விப் பணிப்பாளர் எஸ்.மாணிக்கராசா கேட்டுள்ளார்.நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தை இணைய மையங்கள் ஏற் படுத்தி வருகின்றன. தனியறைகளில் கணனியில் என்ன செய்கின்றனர் என எவருக்கும் தெரியாது.கல்விச் செயற்பாடுகளிலும் கலாசாரத்தி லும் தாக்கத்தை ஏற்படுத்தும் இணைய மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்.அவ்வாறு செய்யும் போதுதான் மாணவர் களின் கல்வி மட்டத்தை உயர்த்த முடியும்.

மேலும் பாடசாலைகளில் இருந்து மாண வர்கள் இடை விலகும் சம்பவங்கள் இடம் பெறு கின்றன.இவ்வாறு இடை விலகும் மாணவர்கள் தொடர்ந்து கல்வியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.எனது பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் பணம் பெற்று மாணவர்களுக்கு அனுமதி வழங் கும் அதிபர்கள் தொடர்பாக எழுத்து மூலம் தக வல்கள் தருமிடத்து அவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலைகளுக்கு கைத்தொலைபேசிகளை மாணவர்கள் கொண்டுவருகின்றனர் என முறைப்பாடுகள் வருகின்றன. பெற்றோர்களை அழைத்து இது தொடர்பாக கேட்டால் பாதுகாப்புக்காக கொடுத்து விடுகின் றோம் என தெரிவிக்கின்றனர். இருப்பினும் பாடசாலைகளுக்குள் கைத்தொலைபேசி கொண்டுவரும் மாணவர் களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுத்துத்தான் வருகின்றோம் என்றார்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com