Subscribe:Posts Comments

You Are Here: Home » அறிவிப்பு பலகை, ஏனயவை » மத்திய கல்லுரியாக மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் தரமுயர்வு.

தென்மராட்சி கல்வி வலயத்தில் அமைந்துள்ள மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் மத்திய கல்லுரியாக கல்வி அமைச்சினால் தரமுயர்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகள் தரமுயர்த்தும் திட்டத்தின் கிழ் உள்வாங்கப்பட்டு 4 ஆவது மத்திய கல்லூரியாக மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் உயர்த்தப்பட்டுள்ளது.

1926 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது தற்போது ஆயிரத்து 210 மாணவர்களையும் 56 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. கல்லூரியின் அதிபராக வே.விநாயகமூர்த்தி கடமையாற்றுகிறார்.ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டதை அடுத்து ஆரம்ப பிரிவு அடுத்த வருடத்தில் இருந்து தனித்து இயங்கவுள்ளது.தற்போதுள்ள நிலையில் உயர்தர விஞ்ஞான வகுப்புகளுக்குரிய ஆய்வுகூட வசதி, பிரார்த்தனை மண்டபம், விளையாட்டு மைதானம், ஆகிய வசதிகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது.

தென்மராட்சி வலயத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மகளிர் கல்லூரி, மற்றும் டிறிபேக் கல்லூரி ஆகியன இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com