Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » மண்டைதீவில் 21 வருடங்களின் பின் சில பகுதிகள் மக்களிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடந்த 21 வருடங்களாக கடற்படையினர் வசமிருந்த சில பகுதிகள் மீள்குடியமர்வதற்காக மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மண்டைதீவுப் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

இந்நிலையில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் ஒன்று கூடிய மக்களுடன் கலந்துரையாடி அவர்களது உடனடித் தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டனர்.

இன்றைய தினம் பகுதியிலுள்ள காணிகள் மற்றும் வீடுகள் மக்களிடம ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை 52 குடும்பங்கள் தமது இருப்பிடங்களைப் பெற்றுக்கொண்டு மீள்குடியமர்வுக்காகத் தயாராகி வருகின்றன.

இதன்போது வேலணை பிரதேச சபைத் தலைவர் சிவராசா பிரதேச செயலாளர் நந்தகோபாலன் மற்றும் கடற்படை பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com