Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் – “மண் சுமந்த மேனியர்’ திட்டம்,வடமராட்சியில் அங்குரார்ப்பணம்

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்து வருகின்ற மண்சுமந்த மேனியர் எனும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்ச்சி அண்மையில் வடமராட்சியில் நடைபெற் றுள்ளது. வடமராட்சி திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போரினால் பாதிக்கப்பட்ட 148 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

சுயதொழில் முயற்சிகளுக்கு வசதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் 10 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.தாய், தந்தை இருவரையும் அல்லது தாய் அல்லது தந் தையரை இழந்த மாணவர்கள் 128 பேருக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புத் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. இந்த பணத்தொகை குறித்த மாணவர்களின் பாடசா லைக் கல்வி நிறைவுபெறும் காலம் வரையில் தொடர்ந்து வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட போதிலும் எதுவித உதவியும் பெறாது தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்து வரு கின்ற 5 ஆசிரியர்களுக்கும் தலா 5ஆயிரம் ரூபாய் உதவு தொகை வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கான உதவு தொகை யும் மாதாந்தம் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று ஏற்பாட்டா ளர்கள் கூறினர். கரவெட்டி தபாலதிபர் அ.அருளானந்தசோதியின் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கெளரவ விருந்தினராக பொ. ஐங்கரநேசனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்ச்சியில் அறிவுஜீவிகள், பயனாளிகள் என நூற்றுக் கணக்கானோர் பங்குகொண்டிருந்தனர்.

நன்றி: வலம்புரி

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com