Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » பெற்றோரும் ஆசிரியர்களுமே எனது வெற்றிக்கு காரணம் – யாழில் முதலிடம் பெற்ற மாணவி தாரணி தெரிவிப்பு

பெற்றோர் மற்றும் அதிபர், ஆசிரி யர்களின் முழு ஒத்துழைப்பே எனது வெற்றிக்குக் காரணம் என உடுவில் மகளிர் கல்லூரி மாணவி யும், தரம்-5 புலமைப்பரிசில் பரீட் சையில் யாழ்.மாவட்டத்தில் முதலி டம் பெற்ற மாணவியுமான தாரணி பாலேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து  தாரணி மேலும் கூறிய தாவது,

எனது அப்பா ஒரு சிற்பக்கலைஞர். நாங்கள் சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் வசித்துவருகிறோம். எனக்கு ஒரு தங்கை உண்டு, நான் படிப்பதற்கான சகலவசதிகளையும் எனது பெற்றோர் ஏற்படுத்தித் தந்தனர்.அதேபோன்று எமது கல்லூரி அதிபர் சிராணி மில்ஸ், வகுப்பாசிரி யர் திருமதி சண் முகம் ஆகியோரும் என்னை ஊக்கப்படுத்தி நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற உதவி புரிந்தனர்.

அத்துடன் எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் அன்பழகன் அவர்களும் எனக்கு பல உதவிகளைப் புரிந்துள்ளார். அனைவருக்கும் எனது நன்றிக ளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் எதிர்காலத்தில் ஒரு வைத்தி யராக வந்து சமூகத்துக்குச் சேவை யாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

இதேவேளை சிற்பக்கலைஞராகதான் இருந்தபோதிலும் தனது மகளின் கல்வித் தேவைகளை சிறந்த முறையில் பூர்த்தி செய்து வந்ததாக தாரணியின் தந்தை பாலேந்திரன் தெரிவித்தார். இதேபோன்று எதிர்காலத்திலும் தனது மகளின் கல்வித்தேவை களை சிறந்த முறையில் மேற் கொண்டு அவரின் எதிர்காலம் சிறப் புற பாடுபடுவேன் என்றும் அவர் ஆனந்தம் பொங்கக் கூறினார். இதேவேளை தனது மகளின் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவரின் தாயார் கூறினார்.


Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com