Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » புதுப் பொலிவுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம்

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் நீண்ட காலமாக செயற்பாடதிருந்த நிலையில் யாழ்.மாநகர சபையினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்பு இருந்ததைப் போல கம்பிக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் மணிக்கூட்டுக் கோபுரம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றினால் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் கடிகாரத்தின் மூலம் நேரத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை நிலவியதுடன் அந்தக் கடிகாரங்கள் அடிக்கடி பழுதடைந்து வந்தன..

இதனை அடுத்தே யாழ்.மாநகர சபையினால் ஒரு மில்லியன் ரூபா செலவில் முன்னர் இருந்ததைப் போன்று கம்பிக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் மீண்டும் புதுப்பொலிவுடன் நிமிர்ந்து நிற்கின்றது.

– நீருஜன்
Clock-tover-jaffna1

 

 

 

 

 

 

Clock-tover-jaffna2

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com