Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, விளையாட்டு » பாடசாலை மட்ட விளையாட்டு விழா யாழ்ப்பாண மாவட்ட அணி முதலிடம்

கோலாகலமாக நடைபெற்று முடிந்த வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆயிரத்து 709 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் பெற்றது.
வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையி லான பெருவிளையாட்டுப் போட்டிகள் முன்னரே முடிபுற்ற நிலையில் தடகளப் போட்டிகள் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக் கம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட் டரங்கில் 4 நாள்களாக நடைபெற்று வந்தது. மேற்படி தடகளப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமானது. கல்வி பண்பாட்ட லுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமை யில் இறுதிநாள் போட்டிகள் மற்றும் நிகழ் வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட விருந்தினர்கள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை,யாழ்.இந்து மகளிர் கல்லூரி, சுண் டுக்குளி மகளிர் கல்லூரி ஆகிய பாடசா லைகளின் பாண்ட் வாத்தியக் குழுக்களின் பாண்ட் வாத்திய இசையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பிரதமவிருந்தினர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 11, 13, 15 இருபாலாருக்குமான 100 மீற்றர் ஓட்டப் போட்டிகள் முதல் போட்டிகளாக நடை பெற்றன. 13 வயதுப்பிரிவு ஆண்களுக் கான உயரம் பாய்தல், 17 வயதுப் பிரிவு பெண்களுக்கான ஈட்டி எறிதல் போன்ற போட் டிகள் நடைபெற்றன. இடைவேளையின் போது அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் இசையுடன் கூடிய உடற்பயிற்சி கண்காட்சியும் யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
17, 19 இருபாலாருக்குமான 4மு400 மீற் றர் அஞ்சல் ஓட்டப் போட்டியுடன் போட்டிகள் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ரீதியான தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்டம் பெரு விளையாட்டுப் போட்டிகளில் 925 புள்ளி களும் தடகளப் போட்டிகளில் 784 புள்ளி களுமாக 1709 புள்ளிகள் பெற்று முதலிடத் தைத் தட்டிச்சென்றது.

இரண்டாம் இடத்தை 386 புள்ளிகள (பெருவிளையாட்டு-60, தடகளம்-326) பெற்று மன்னார் மாவட்டமும், மூன்றாம் இடத்தை 314 புள்ளிகள் (பெருவிளையாட்டு -95, தடகளம்-219) பெற்று வவுனியா மாவட்ட மும் தட்டிச் சென்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முறையே 25, 12 புள்ளிகளைப் பெற்று அடுத்த இடங்களில் இருந்தன.

ஒவ்வொரு வயதுப்பிரிவிலும் சிறந்த ஆற் றுகையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனை களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டன. வீர வீராங்கனைகளின் பெயர்விபரம் வருமாறு, 11 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் மன் னார் முருங்கன் மகாவித்தியாலய வீரன் எஸ்.ரி.சத்தியன் (புள்ளி-13), பெண்களில் உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியைச் சேர்ந்த அ.அபிநயா (புள்ளி 10).
13 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் மன் னார் சென்சேவியர் கல்லூரியைச் சேர்ந்த ம.அபியத்சீம் (புள்ளி-15), பெண்களில் இள வாலை கன்னியர் மட வீராங்கனை சி.மேரி நிலக்­னா (புள்ளி 13). 15 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் மன் னார் சென்சேவியர் கல்லூரியைச் சேர்ந்த ஜி.ஆர்.சந்தியோகன் (புள்ளி-10), பெண்களில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ம.ஜோய்கருணா, சண்டிலிப்பாய் இந்துக் கல் லூரியைச் சேர்ந்த கே.சங்கீதா (புள்ளி 13). 17 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் சென்பற்றிக்ஸ் கல்லூரியை சேர்ந்த சி.ஆர். மோடேன் எல்விஸ் (புள்ளி-15), பெண்களில் வட்டு மத்தியக்கல்லூரியைச் சேர்ந்த ம.கம லினி, மன்னார் நானாட்டான் மத்திய மகாவித்தி யாலய வீராங்கனை கி.யூடிற் ஜெமினி (புள்ளி 13). 19 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் சென் ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பு.பானுப் பிரியன், வவுனியா தமிழ் மகாவித்தியாலய லி.சர்மிளன் (புள்ளி-10), பெண்களில் அள வெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.காவேரி (புள்ளி 15).

21 வயதுப்பிரிவு: ஆண்கள் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.ரகுவரன், மன்னார் நானாட்டன் மத் திய மகாவித்தியாலய ஜே.செல்வராஜ் (புள்ளி -10), பெண்களில் மகாஜனக்கல்லூரியைச் சேர்ந்த செ.கீர்த்திகா, வவுனியா கோவிற்குளம் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த எஸ்.எழிலரசி (புள்ளி 15) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் மாவட்டங் களின் வெற்றிக்கேடயங்களை பிரதமவிருந் தினர் வழங்கினார். இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஷ், வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராசையா ஆகியோரும் கலந்து கொண்டனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வலிகாமம், யாழ்ப்பாணம், தென்ம ராட்சி, தீவகம், வடமராட்சி, கிளிநொச்சி, முல் லைதீவு, துணுக்காய், மடு, மன்னார் , வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு ஆகிய வலயங் களைச் சேர்ந்த கல்விப்பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தடகளப்போட்டிகள் ஆரம்பித்த நாட்களில் இருந்து முடியும் நாள்வரையிலும் மொத்த மாக 9 வீரர்கள் ஆரம்பிப்பாளர்களால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:வலம்புரி பத்திரிகை

© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com