Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » பருத்தித்துறை முனையிலிருந்து காலி வரையான “தேசியசாரணர்” சைக்கிள் சுற்றுலா

இலங்கை சாரணர் சங்க நூற்றாண்டை முன்னிட்டு பருத்தித்துறை முனையிலிருந்து காலி வரையான “தேசியசாரணர்” சைக்கிள் சுற்றுலா நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறையில் ஆரம்பமானது. நேற்றுக் காலை 7.45 மணியளவில் பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்த சைக்கிள் சுற்றுலா முற்பகல் 10.30 மணியளவில் யாழ்.பொது நூலக முன்றிலை வந்தடைந்தது.

இந்தச் சுற்றுலாவுக்கு வட மாகாணத்திலிருந்து 35 மாணவர்கள் பங்குபற்றும் அதேவேளை நாட்டின் தென்பகுதியிலிருந்தும் 104 மாணவர்கள் இதில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தனர்.சுற்றுலாக் குழுவினரை வரவேற்று வழியனுப்பும் நிகழ்வு யாழ்.பொதுநூலக முன்றிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவனும், சிறப்பு விருந்தினராகப் பிரிகேடியர் அனுரசுபசிங்க மற்றும் பிரதம சாரணர் ஆணையாளர் பேனாட் பட்டுவாங்கல, உதவி சாரணர் ஆணையாளர் பிரபாத்குணரத்ன, வடமாகாண சாரணர் ஆணையாளர் என்.போஜன் உட்படப் பலர் கலந்துகொண்டனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சாரண மாணவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.நேற்று ஆரம்பித்த இந்தச் சுற்றுலா கிளிநொச்சியை சென்றடைந்து பின்னர் ஒவ்வொரு இடங்களிலும் தங்கி எதிர்வரும் 22 ஆம் திகதி காலியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com